இலங்கைக்கு நிதி வழங்கத் திட்டமிடவில்லை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.