இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
சுமார் 50 பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் நேற்றைய தினம் கருத்துக்களை பெற்றுக் கொண்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மின்சாரக் கட்டணங்களை அதிகரித்தல் அலகுகளுக்கான கட்டண நிர்ணயம் என்பன குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிர்ணயம் செய்யவுள்ளது.
எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியில் கட்டண அதிகரிப்பு குறித்து தீர்மானம் எடுக்கப்படும் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.