மாலைத்தீவு, சிங்கப்பூரை அடுத்து தாய்லாந்தில் கோட்டாபய!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்காலிக தங்குமிடத்திற்காக வியாழக்கிழமை தாய்லாந்து சென்றடைந்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ராஜபக்ச இரவு 8 மணியளவில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து அவர் விமானத்தில் தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.
ஜூலை 14ஆம் திகதி இலங்கையிலிருந்து மாலைத்தீவு ஊடாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற ராஜபக்ச, சிங்கப்பூரில் தற்காலிக வீசாவில் தொடர்ந்தும் இருக்கமுடியாத நிலையிலேயே தாய்லாந்துக்கு சென்றுள்ளார்