QR கோட்டா முறை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்!

QR கோட்டா முறை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (14) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது.

கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் QR முறைப்படி எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட வரிசை குறைந்தது.

இதேவேளை, QR முறைக்கு வெளியே எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் வெளியீடு குறித்த தரவுகளை சரிபார்த்து, உரிய முறைக்கு புறம்பாக எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.