பொதுஜன பெரமுனவின் புதிய நிர்வாக குழு நியமனம் – நவம்பர் மாதம் கட்சியின் மாநாடு

பொதுஜன பெரமுனவின் புதிய நிர்வாக குழு நியமனம் – நவம்பர் மாதம் கட்சியின் மாநாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொதுஜன முன்னணி கட்சியின் புதிய நிர்வாக குழு நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இந்த புதிய நிர்வாக சபையை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது கட்சியின் தலைவராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை அந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.