மதிய உணவு இடைவேளை நேரமும் குறைக்கப்படும்

மதிய உணவு இடைவேளை நேரமும் குறைக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் மதிய உணவுக்காக ஒதுக்கப்படும் நேரத்தை அரை மணி நேரத்தால் குறைக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மதிய உணவு இடைவேளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மின்கட்டண உயர்வு தீர்மானம் மீதான விவாதம் வரும் 29 திகதி காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தில் நடைபெறும்.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 30, 31, 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.