பிஸ்கட் விலை அதிகரிப்புக்கு உற்பத்தியாயளர்கள் விளக்கம்

பிஸ்கட் விலை அதிகரிப்புக்கு உற்பத்தியாயளர்கள் விளக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமது உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் விசேட கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக பிஸ்கட்டுக்களின் விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் தங்களது உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

தங்களது உற்பத்தி பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாகவே தங்களது உற்பத்தி பொருட்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.