ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று (15) நள்ளிரவு கல்முனை காஸீம் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் குறித்த நபர் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் 39 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து மூன்று 5,000 ரூபா போலி நாணயத்தால்கள் உட்பட ஹெரோயின் போதைப்பொருள் 3 கிராம் 100 மில்லி கிராம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.