இலங்கையில் பிறந்த பிரபல நடிகை மீது குற்றச்சாட்டு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் பிறந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்தபடியே பல நூறு கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக வெளிநாடுகளுக்கு பினாமி பெயரில் பரிவர்த்தனை செய்ததாக சுகேஷ்குமார் மற்றும் அவர் மனைவி லீனா மரியா பால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டசிடம் இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஜாக்குலினிடம் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
அவருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் அவர் மனைவி லீனா மரியா பாலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜாக்குலின் வங்கிக் கணக்குகளும் ஆராயப்பட்டன.
இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.