கடன் பெறுவதற்கான கலந்துரையாடல்

கடன் பெறுவதற்கான கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவின் எரிபொருள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஸ்புட்னிக் செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பான கலந்துரையாடல்கள் திறம்பட நடந்து வருவதாகவும், தற்போதைய நெருக்கடியில் ரஷ்யாவிடமிருந்து நிறைய உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவதற்கு கடன் வசதி ஒன்றை பெற்றுத் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சில மாதங்களாக இலங்கை கடுமையான பொருளாதார மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததாகவும், ஆனால் தற்போது நாடு மெல்ல மீண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்