ஹட்டனில் வெடித்த போராட்டம்!

ஹட்டனில் வெடித்த போராட்டம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “பொருட்களின் விலையை உடனடியாக குறை என்ற தொனிப் பொருளில் ஹட்டனில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், தோட்ட தொழிலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர் பங்கேற்றனர்.

ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணம் எங்கே, பால், முட்டை, இறைச்சி, மீன் ஆகியன அமைச்சர்களுக்கு மாத்திரமே, மக்கள் வீதியில் சொகுசு வாகனம் அமைச்சர்களுக்கு, நாட்டுக்கு பாரமான அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை இல்லாதொழி, என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.