அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அவசர அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (20) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற சபையில் இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வாய்மூல பதில்களை எதிர்பார்த்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சபையில் தங்காமல் பதில் அளிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலையியற் கட்டளைகளின் கீழ் குறிப்பிடப்படும் கேள்விகள் மற்றும் சபை ஒத்திவைப்பின் போது குறிப்பிடப்படும் கேள்விகளுக்கு வாய்மூல விடைக்காக குறிப்பிடப்படும் கேள்விகளுக்கும் பதில் வழங்குவது கட்டாயம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
உரிய திகதியில் இருக்க முடியாவிட்டால் அரசாங்கக் கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகத்துக்கு முன்கூட்டி அறிவிக்க வேண்டும்.