அமெரிக்க ஜனாதிபதியுடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 77 வது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக இருவரும் உரையாடியதாக தெரிய வருகிறது. இந்தச் சந்திப்பு இலங்கைக்கு ஒரு புது சக்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று அலி சப்ரி தெரிவித்துள்ளார்.