விசேட பெரும்பான்மை தேவை

விசேட பெரும்பான்மை தேவை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெற்றோலிய பொருட்கள் தொடர்பான சிறப்பு விதிகள் (திருத்த) பிரேரணை அரசியலமைப்பின் 12 (1) ஆவது பிரிவுக்கு முரண்பாடானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில் இந்த திருத்த பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை அவசியம் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இல்லாத பட்சத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்ற முடியும்.

பெற்றோலிய பொருட்கள் தொடர்பான இந்த விசேட பிரேரணையை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கடந்த 31 ஆம் திகதி சபையில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது