குமார தர்மசேனவுக்கு அமோக வரவேற்பு..!

குமார தர்மசேனவுக்கு அமோக வரவேற்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

– டி.கே.ஜி கபில –

இலங்கைக்கு ​கௌரவத்தையும் மதிப்பையும் தேடித் தந்துள்ள இலங்​கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் போட்டிகளின் நடுவருமான குமார தர்மசேனவை வரவேற்கும் நிகழ்வு இன்று (16) காலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் நடைபெற்றது.

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் ​போட்டியில் இலங்கை அணி சார்பாக விளையாடிய குமார தர்மசேன, 2009ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடுவராக இணைந்துக்கொண்டதுடன் 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் உலகில் சிறந்த கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

குமார தர்மசேன இதுவரை 75 டெஸ்ட் போட்டிகள், 118 ஒரு நாள் போட்டிகள், 42 இருபதுக்கு இருபது போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.

கட்டாரில் இருந்து இன்று -16- நாடு திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.