ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி..?

ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி..?

2022 ஃபிஃபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 6வது முறையாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

தன்னுடைய 35 வயதில் , ஒரு முறையாவது ஃபிஃபா உலககோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் அவர் விளையாடி வருகிறார்.

மேலும், ஆட்டம் முழுவதும் வாய்ப்புகளை உருவாக்கிய மெஸ்ஸி, 2 முறை சிறப்பாக பந்தை சக வீரர் அல்வாரெசிடம் பாஸ் செய்து கோல் போட முடிவு எடுத்தார்.

இதன் மூலம் அர்ஜென்டினா அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

என்னுடைய உலகக்கிண்ண பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலகக்கிண்ணம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அது வரை என்னால் விளையாட முடியுமா என தெரியாது. விளையாடினாலும், இப்படி சிறப்பாக செயல்பட்டு, அணியை பைனலுக்கு வரை கொண்டு செல்வேனா என்றும் தெரியாது.

வரும் 18ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலகக்கிண்ணத்தை வென்று தருவேன் என நம்புகிறேன். உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக 11 முறை கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

தனது சாதனை குறித்து பேசிய மெஸ்ஸி, சாதனைகள் படைத்தது மகிழ்ச்சி தான். ஆனால், உலகக்கிண்ணத்தை வெல்வதே எங்களுடைய முக்கிய குறிக்கோள்.

அது தான் அனைத்தையும் விட மிகவும் அழகானது. இன்னும் நாங்கள் ஒரு அடி அருகே தான் இருக்கிறோம். இறுதிப் போட்டியில் இன்னும் ஒரு முறை கடுமையாக போராடுவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இம்முறை கனவை நினைவாக்க பாடுபடுவோம் என்று மெஸ்ஸி கூறினார்.