கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட திர்மானம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சட்டமூலம் நாளைய தினம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று (18) பிற்பகல் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.