பேராதனையில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

பேராதனையில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியானது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தடைப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது.