ஜீவன், பவித்ரா ஆகியோருக்கும் அமைச்சு பொறுப்புகள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிதாக இன்று நியமிக்கப்பட இருக்கும் அமைச்சர்களில் ஜீவன் தொண்டமான், பவித்ரா வன்னி ஆராய்ச்சி ஆகியோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் சொற்ப வேளையில் இவர்கள் பதவி பிரமாணம் செய்யலாம் என அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.