கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது…!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் வேலை வாங்கி தருவதாக கூறி 75 பேரிடம் மோசடி செய்துள்ளார்.
இவரால் பிடிபட்டவர்கள் 5 இலட்சம் ரூபா தொடக்கம் 22 இலட்சம் ரூபா வரையில் பணம் கொடுத்துள்ளதாகவும், சந்தேக நபர் கனடாவில் வேலை பெற்றுத் தருமாறு ஒருவரிடம் 33 இலட்சம் ரூபா பணத்தை கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபருடன் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அரசியல் சக்திகளின் தலையீட்டினால் இது நடந்ததாகவும் பண மோசடியில் சிக்கிய இளைஞன் ஒருவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இந்த பண மோசடியில் சிக்கியவர்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.