இலங்கை அணி 355 ஓட்டங்கள்

இலங்கை அணி 355 ஓட்டங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த போட்டியின் போது அஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் 7,000 ஓட்டங்களைக் கடந்த இலங்கையின் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கினார்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று நியூசிலாந்து அணி தற்போது தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகிறது.