தேர்தல் குறித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி

தேர்தல் குறித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.