சிறப்புரிமை மீறப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் விசனம்

சிறப்புரிமை மீறப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் விசனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் குழுவின் ஊடாக விசாரணை நடத்தக் கோரிக்கை

வழக்கு எண் SC/FR/69/2023 எனும் இடைக்கால உத்தரவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இன்று பாராளுமன்றத்தில் சிறப்புரிமைக் கேள்வியொன்றை எழுப்பினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

“SC/FR/69/2023 எனும் வழக்கு எண்ணு க்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவு குறித்து, பிரேமநாத் சி. தொலவத்த பாராளுமன்றத்தில் சிறப்புரிமைக் கேள்வியொன்றை எழுப்பியது உங்களுக்குத் தெரியும்.2023 மார்ச் 08 ஆம் திகதியிடப்பட்ட எண். F/03/2023, எனும் கடிதம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரிடம் சமர்ப்பித்ததன் மூலம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டுள்ளன”

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர் இடைக்கால உத்தரவை அமுல்படுத்தி தீர்ப்பை சபையில் முன்வைத்தமை பாரிய தவறு என்றும் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார்.

“இந்நிலையில் பிரேமநாத் சி தொலவத்த எம்.பி எழுப்பிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், அது பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிடம் முன்வைத்து அந்த வழக்கை விசாரித்து முடிவை சபைக்கு முன்வைக்கும் முன்னர் மேலே குறிப்பிட்ட வழக்கின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தியமை மிகப் பெரிய தவறு “

இங்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதத்தை சமர்ப்பித்த ஷெஹான் சேமசிங்க,, அந்த விடயத்தையே பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு அனுப்பி விசாரணையை நடத்துமாறு பிரதி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று, சிறப்புரிமைக் குழு விசாரணையை நிறைவு செய்யும் வரை மேற்படி விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துமாறும் அவர் பிரதி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.