
எதிர்வரும் திங்கள் அன்று அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற்சங்கம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆகிய 04 மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வைத்தியசாலைகளிலும் அன்றைய தினம் காலை 08 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 08 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளடக்கிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (10) இடம்பெற்ற விசேட மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.