இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள கப்பல் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளதாகவும், கப்பல் இன்று இரவு துபாய்க்கு புறப்பட உள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.