இந்தியாவிடமிருந்து 7 அத்தியாவசிய மருந்துகள்

இந்தியாவிடமிருந்து 7 அத்தியாவசிய மருந்துகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கடன் திட்டத்தின் கீழ் 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மருத்துவ விநியோகத் துறையில் சுமார் 150 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

முற்பதிவு செய்யப்பட்ட மருந்து வகைகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியூடாகவும் மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் எனவும் சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.