பேருந்தில் மோதி யானை குட்டி உயிரிழப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹபரண திருகோணமலை பிரதான வீதியில் பயணிகள் பஸ்ஸில் காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்துள்ளதாக கல்ஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலைக்கு கொழும்பிலிருந்து சென்ற பயணிகள் பஸ் ஒன்றில் காட்டு யானைக்குட்டியொன்று மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானை மோதியதில் பயணிகள் பஸ்ஸிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்ஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.