நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடலாம் என எச்சரிக்கை

நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடலாம் என எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களில், தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு மூலம் பெறப்பட்ட 1.1 மில்லியன் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மார்ச் 31-ஆம் திகதியுடன் தகவல் கணக்கெடுப்பு முடிவடைவதால், அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்துகிறார்