IMF ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு, பல்வேறு கருத்துக்களை வெளியிடும் எதிர்க்கட்சிகளும், கட்சிகளும் அது குறித்து பேசுவதற்கும் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.