உள்ளூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தலுக்காக முதலில் மார்ச் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் இம்முறை வாக்குப்பதிவு திகதியும் தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பணம் வழங்கப்படாததன் காரணமாக, வாக்குச் சீட்டு இதுவரை அச்சடிக்கப்படாததால் இவ்வாறு தேர்தல் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.
எனினும், தேர்தல் ஒத்திவைப்பு குறித்து ஆணைக்குழு இது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது