அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படுகின்றது?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் 20,000 ரூபாயினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்