சிறுவர்களிடையே பரவும் இன்புளுவென்சா

சிறுவர்களிடையே பரவும் இன்புளுவென்சா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்புளுவென்சா மற்றும் அதுபோன்ற வைரஸ் நோய்கள் இன்றைய காலத்தில் சிறுவர்களிடையே அதிகம் காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோய் பல சிறு குழந்தைகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.