தேஷபந்து தென்னகோனுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

தேஷபந்து தென்னகோனுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் கிடைத்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனிப்பட்ட முறைப்பாட்டை செல்லுபடியற்றதாக்குமாறு தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.