காப்புறுதி நிறுவன ஊழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.