‘தோனிக்கு கடைசி சீசனாக இருக்க வாய்ப்பு இல்லை’: ரோகித் சர்மா

‘தோனிக்கு கடைசி சீசனாக இருக்க வாய்ப்பு இல்லை’: ரோகித் சர்மா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு இந்த சீசனே கடைசியாக இருக்கும் என நினைக்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என நான் கருதவில்லை. இதை நான் கடந்த 2 முதல் 3 வருடங்களாக கேள்விப்பட்டு வருகிறேன். அவர், இன்னும் விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.

தோனி தொடர்ந்து விளையாடுவார் என்றே நினைக்கிறேன்” என்றார்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் கூறும்போது, “எம்எஸ் தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்கும் என நான் கேள்விப்படுகிறேன். ஆனால், நான் அவ்வாறு நினைக்கவில்லை. தோனி அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு விளையாடலாம்” என்றார்.