சுயமாக வேலையில் இருந்து விலக ரூபவாஹினி ஊழியர்களுக்கு அறிவித்தல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுயமாக வேலையில் இருந்து விலக விரும்பும் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனத்தை இலாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்றும் சவாலை எதிர்கொண்டுள்ளதால், இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்து சுயமாக விலகும் ஊழியர்களுக்கு கூடுதல் இழப்பீடாக 25 லட்சம் ரூபா வழங்கப்படும் என்பதுடன் குறைந்தபட்ச இழப்பீடாக 5 லட்சம் ரூபா வழங்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும் இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள்,நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக காட்டி விற்பனை செய்ய ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக கூறியுள்ளனர்.