ஆங்கிலம் கற்பிக்க 13,800 ஆரம்ப ஆசிரியர்கள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முதலாம் தரப் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கங்கொடவில சமுத்திராதேவி மகளிர் ஆரம்பப் பாடசாலையில் இன்று (30) முதலாம் தரப் பிள்ளைகளுக்கான ஆங்கில மொழிப் பாவனையை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முதலாம் தரப் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கங்கொடவில சமுத்திராதேவி மகளிர் ஆரம்பப் பாடசாலையில் இன்று (30) முதலாம் தரப் பிள்ளைகளுக்கான ஆங்கில மொழிப் பாவனையை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்குத் தேவையான சுமார் 13,800 ஆரம்ப ஆசிரியர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் மாணவர்கள் ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் கல்வி கற்பதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொள்ள ஆங்கில மொழி ஊடான கல்வியை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, அடுத்த வருடம் இத்திட்டம் தரம் இரண்டிலிருந்தும் பின்னர் தரம் மூன்றிலிருந்தும் ஆங்கில மொழி மூலமான கல்வி இணைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்