இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (01) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராமின் விலை 80 ரூபாவினாலும் குறையும்.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
அந்த முட்டைகளில் பொதுமக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் . உபுல் ரோஹன தெரிவித்தார்.