ஆடவர் டென்னிஸ் சென்னையில் இன்று ஆரம்பம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் ஆதரவுடன் பா.ராமச்சந்திர ஆதித்தன் நினைவு ஐடிஎஃப் சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டி சென்னை அடையாறில் உள்ள காந்திநகர் கிளப் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் மனிஷ் கணேஷ், சந்தேஷ் தத்தாத்ரேய் குராலே, ஒஜஸ் தேஜோ ஜெயபிரகாஷ், அர்ஜூன் மகாதேவன் ஆகியோருக்கு வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, தென் கொரியா, சீனதைபே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இந்தியாவின் முன்னணி வீரர்களான ராம்குமார், சித்தார்த் ராவத், திக்விஜய் பிரதாப் சிங், மனிஷ் சுரேஷ்குமார், நிகி கலியண்டா, பிராஜ்வால் தேவ் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.6 லட்சம் ஆகும்.