யாழில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் உணவுகளின் விலை குறைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
யாழ்.மாவட்டத்தில் இன்று முதல் சில உணவுகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி தேநீர், பால் தேநீர் மற்றும் பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில் இருந்து 10 ரூபா விலை குறைத்து விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்.வணிகர் கழகத்தில் நேற்று(07.04.2023) உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொதிகளின் விலையும் தீர்மானிக்கப்படும்
ஒவ்வொரு உணவு நிலையங்களுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடு காணப்படுவதால் அந்தந்த விலைகளில் இருந்து 10 ரூபாவை குறைத்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் உணவுப்பொதிகள் மற்றும் வேறு உணவுப்பண்டங்களின் விலைகள் தொடர்பாக முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது