வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத நபர், முன்னாள் சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்றை திடுடிச் சென்றார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்று இனந்தெரியாத நபரால் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி இரவு, கொழும்பு 7 இலுள்ள குறித்த அலுவலகத்திற்கு வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத நபர், அலுவலகத்தில் இருந்த கோப்புகள் அனைத்தையும் தேடிப் பார்த்து ஒரு கோப்பை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் அலுவலகத்திற்குள் சுமார் 10 நிமிடங்கள் வரை இருந்துள்ளார் என சிசிடிவி பதிவின் படி அறிய முடிந்துள்ளது.