ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை: ) – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச அதிகம் நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் பந்துகள் வீச அணிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆட்டமும் முடிவடைய சுமார் 4 மணி நேரம் ஆகிறது. இந்த வகையில் நேற்று முன்தினம் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது ராஜஸ்தான் அணி. இந்த தவறை இந்த சீசனில் முதன்முறையாக ராஜஸ்தான் மேற்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.