7 கோடி ரூபாவை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை கடந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.