குரங்குகளை சீனாவிற்கு அனுப்பும் திட்டத்திற்கு விவசாயிகள் அமைப்புகள் ஆதரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் குரங்குகளின் தொல்லையை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட விவசாயிகள் அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.
சீனாவின் உயிரியல் பூங்காக்களுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கோரிக்கையை சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல்வேறு நபர்களும் விமர்சித்திருந்தாலும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
குரங்குகள் மற்றும் பிற விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் சேதம் மிகப்பெரியது என குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.