சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் தப்பியோட்டம்

சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் தப்பியோட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 9 கைதிகள் இன்று அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிடுகின்றார்.

சிறு குற்றங்களுடன் தொடர்புடைய இளையோரே இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.