அமைச்சரவை வழங்கிய மற்றுமொரு அங்கீகாரம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதன்படி, மே மாத இறுதிக்குள் புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
மேலும் மறுசீரமைப்பு திட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு பணியகத்தை நிறுவவும், குறித்த செயல்முறை மற்றும் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, USAID மற்றும் JICA போன்ற அபிவிருத்தி பிரதிநிதி நிறுவனங்களின் ஆதரவைப் பெறவும், நிதி மற்றும் மனிதவள தணிக்கைகளை நிறைவு செய்யவும் மற்றும் ஒக்டோபர் 2023 இறுதிக்குள் முழு மறுசீரமைப்பு செயல்முறையையும் முழுமைப்படுத்தவும் அனுமதி பெற்றுத்தரப்படும் எனவும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.