மாகாண சபை தேர்தலை உடன் நடத்த சட்ட திருத்தம்25 இல்சபையில் சமர்ப்பிக்கிறார் சுமந்திரன் எம்.பி

மாகாண சபை தேர்தலை உடன் நடத்த சட்ட திருத்தம்25 இல்சபையில் சமர்ப்பிக்கிறார் சுமந்திரன் எம்.பி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணசபை தேர்தலை பழைய முறையில், உடனடியாக நடத்துவதற்கு, இலகுவான சட்டத்திருத்தம் ஒன்றை எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன்,குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இரண்டு வாரங்களில் பின்னர் அதனை சட்டமாக உருவாக்க முடியும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே,நாடாளுமன்றம் இந்த விடயத்தில் தீர்க்கமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

பல ஆண்டுகளாக நடைபெறாமல் பிற்போடப்படுகின்ற மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்களை நீக்குவதற்கான சட்டமூலத்தையே நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலமாக சமர்ப்பிக்கவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு ஆளும் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.