மீண்டும் தேசிய அரசாங்கம் ? எதிர்வரும் 25ஆம் திகதி புது திருப்பம் !!

மீண்டும் தேசிய அரசாங்கம் ? எதிர்வரும் 25ஆம் திகதி புது திருப்பம் !!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகள் மற்றும் உடன்படிக்கையையும் ஜனாதிபதி அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையில் தானும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.