இலங்கையின் குரங்கு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சீனா

இலங்கையின் குரங்கு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சீனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக வெளியான அறிவிப்பால் பல தரப்பினரால் வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கையின் குரங்குகளுக்கு எந்தவொரு தரப்பினரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பான விளக்கம் அடங்கிய பதிவினை சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சீனாவின் துறைசார் நிறுவனங்கள் எவையும் இது குறித்து அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியாக தமது நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளது.

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.