பிறை தென்பட்டது: நாளை நோன்பு பெருநாள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர்.
பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை சனிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அவ்வகையில், 2023 சனிக்கிழமை 22 ஆம் திகதி ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.